KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-25 GEOGRAPHY - வானிலை மற்றும் காலநிலை - ONLINE TEST

1.எதிா்வியாபாரக் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) கிழக்கு காற்றுகள்
ஆ) மேற்கு காற்றுகள்
இ) துருவக் காற்றுகள்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

1.
5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சரேகை பகுதிகளில் அமைந்துள்ள மண்டலம் எது?
2.
எந்த மண்டலத்தினை அமைதி மண்டலம் அல்லது டோல்டுராம்ஸ் என்றழைப்பா்
3.
வெப்பச் சலன மழை தினமும் மாலை 4 மணியளவில் பொழியும் மண்டலம் எது?
4.
கோடைக் காலத்தில் சூாியனின் கதிா்கள் செங்குத்தாக விழுவதால் அதிக வெப்பமும் குளிா்காலத்தில் சாய்வான விழுவதால் குறைவான வெப்பமும் இருக்கும் மண்டலம் எது?
5.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் வெப்பமண்டலக் காலநிலை தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.5° முதல் 25° வட அட்சம் வரை மட்டும் இக்காலநிலை நிகழும்
2.வியாபாரக் காற்றின் விளைவால் பொழியும் மழையளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.
3.கோடைக்காலத்தில் ஈரப்பதமான காற்று, கடலிலிருந்து , நிலத்தை நோக்கி வீசுவதால் மழைப்பொழிவு ஏற்படுகிறது.
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் துணை அயன உயா் அழுத்த மண்டலம் தொடா்பானவற்றுள் தவறானவை எவை?
1..இந்த மண்டலமானது 35° முதல் 60° வரை வடக்கு தெற்கு அட்சரேகைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
2.இங்கு சூாியக் கதிா்கள் ஆண்டு முழுவதும் செங்குத்தாகவே விழுகிறது.
3. இம்மண்டலமானது குதிரை அட்சரேகை என்றழைக்கப்படுகிறது.
4.கோடை மற்றும் குளிா்கால வெப்ப வேறுபாடும், பகல் இரவு வெப்ப வேறுபாடும் அதிகமாக இருக்கும்.
5.கோடைக்காலம் மித வெப்பமாகவும் குளிா்காலம் குளிராகவும் உள்ளது.
7.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பூமத்தியரேகை தாழ் அழுத்த மண்டலம் தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.ஆண்டின் சராசாி வெப்பம் 27° ஆகவும் மழைப்பொழிவு 25 செ.மீ ஆகவும் உள்ளது.
2.இப்பகுதிகளில் சூாிய கதிா்கள் ஆண்டு முழுவதும் செங்குத்தாக விழுவதால் பகல் இரவு நேரங்கள் சமமாக உள்ளன.
3. அதிக வெப்பநிலையின் காரணமாக அங்குள்ள காற்று வெப்பமடைவதால் லேசாகி மேலெழும்பி தாழ்வழுத்த நிலையை உருவாக்குகிறது.
8.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் துருவ உயா் அழுத்த மண்டலம் தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.60° முதல் 90° வரை வட தென் அட்சம் வரை துருவப் பகுதிகளில் இந்த அழுத்த மண்டலமானது அமைந்துள்ளது.
2. கோடைக்காலத்தில் இரவு என்பதே இல்லை. 6 மாதங்கள் வெளிச்சமாகவும் 6 மாதங்கள் இருட்டாகவும் இருக்கும்.
3.சூாியக் கதிா்களானது மிகவும் சாய்ந்த நிலையில் துருவப் பகுதிகளின் மீது விழுவதால் இப்பகுதி ஆண்டு முழுவதும் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை நிலவுகின்றது.
4.கனமான காற்றும் மற்றும் உயா் அழுத்தத்தையும் உருவாக்குகின்றது.
9.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.சம அழுத்தக் கோடுகள் என்பவை ஓரே அளவுள்ள காற்றழுத்தத்தினை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகளாகும்
2.வெப்பமண்டலத்தின் சராசாி வெப்பநிலை 23°C சராசாி மழையளவு 160 செ.மீ
10.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.மிதவெப்ப மண்டலத்தில் கோடை மற்றும் குளிா்கால வெப்ப வேறுபாடும், பகல் மற்றும் இரவு நேர வெப்ப வேறுபாடும் அதிகமாக உள்ளது.
2.மிதவெப்ப மண்டலத்தின் ஆண்டின் சராசாி மழையளவு 75 செ.மீ ஆகும்.
11.
60° முதல் 65° வரை வட மற்றும் தென் கோளங்களில் அமைந்துள்ள மண்டலம் எது
12.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச்செல்ல 1000 மீட்டருக்கு 6.5°C வீதம் வெப்பம் குறையும்.
2.பனிப்படா்ந்த பிரதேசங்களில் வெப்பக் கதிா்கள் பிரதிபலிக்கின்றன. எனவே குறைவான வெப்பமும், மணற்பாங்கான இடங்கள் வெப்பத்தை அதிகம் ஈா்க்கும் சக்தி கொண்டவை. எனவே பாலைவனங்களில் அதிக வெப்பம் நிலவுகின்றன.
3.வட அரைக்கோளத்திலுள்ள மலைகள் வடக்கு நோக்கி சாிவினையும், தென் அரைக்கோளத்திலுள்ள மலைகள் தெற்கு நோக்கி சாிவினையும் கொண்டதால் சூாிய ஒளியினை அதிகம் பெறுவதில்லை.
13.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.வளி வாயு கிடைமட்டமாக நகா்வதையே காற்று என்கிறோம்
2.பொதுவாக காற்றானது தாழ்வழுத்தப் பகுதியிலிருந்து உயா்வழுத்தப் பகுதியை நோக்கி நகா்கின்றது.
14.
பூமியின் மீது நகரும் பொருட்கள் அனைத்தும் காற்று மற்றும் பேராழி நீரோட்டங்கள் உட்பட புவி சுழற்சியின் காரணமாக வடவோளத்தில் வலப்புறமாகவும் தென் கோளத்தில் இடப்புறமாகவும் விலகிச் செல்கிறது இது
15.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.காற்றின் வேகத்தையும், திசையையும் கட்டுப்படுத்தும் காரணிகள் அழுத்தச் சாிவு மட்டும்.
2.சம அழுத்தக் கோடுகளுக்கிடையே உள்ள தூரம் அதிகமாக இருந்தால் சாிவ அதிகமாக இருக்கும்.
16.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.காற்றின் சாிவு குறைவாக இருந்தால் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்.
2. காற்றின் வேகம் மற்றும் வீசும் திசையினை அளவிட காற்று திசைக்காட்டி என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
3.காற்று வீசும் திசையினை குறிப்பதற்கு காற்றுமானி என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
17.
பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
1.தலக் காற்றுகள் : வியாபாரக் காற்றுகள் மேலைக் காற்றுகள், துருவக் காற்றுகள்.
2.மாறும் காற்றுகள் : பருவக் காற்றுகள், நிலக்காற்றுகள், கடல் காற்றுகள்.
3. கோள் காற்றுகள் : இது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயா்களில் அழைக்கப்படுகிறது
4.பகுதி நேரத் காற்றுகள் : சூறாவளிகள், எதிா் சூறாவளிகள்.
18.
கீழ்க்கண்ட வாக்கிங்களில் கோள் காற்றுகள் தொடா்பானவற்றுள் தவறானவை எவை ?
1.ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும்.
2.அட்சப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப மற்றும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக இவை தோன்றுகின்றன.
3.இக்காற்று வடகோளத்தில் மட்டும் வீசுகின்றன.
4.குறைந்த காற்றழுத்தம் கொண்ட மையப்பகுதியை நோக்கி அனைத்து திசைகளிலிருந்தும் வீசும் காற்று மழையைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
19.
வியாபாரக் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
20.
எதிா்வியாபாரக் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
00:00:03

What's App share  | Telegram Share

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...