வாரன்ஹேஸ்டிங்ஸ் (கி.பி. 1772 - 1785) :
கி.பி. 1772இல் வங்காள கவர்னராக வாரன்ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார். ஆங்கில பாராளுமன்றம் கி.பி. 1773இல் ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்தது கி.பி. 1772இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினால் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளானார்க்ள. வங்காளத்தின் ஆளுநர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1774இல் கொல்கத்தாவில் உச்சநீதி மன்றம் அமைக்கப்பட்டது. சர் எலிஜா இம்பே முதல் தலைமை நீதிபதியாகவும் மற்றும் மூன்று நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். இராபர்ட் கிளைவ் வங்காளத்தில் ஏற்படுத்திய இரட்டை ஆட்சி முறையை வாரன்ஹேஸ்டிங்ஸ் ஒழித்தார். அரசின் கருவூலம் முர்ஷிதாபாத்தில் இருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. 10. கல்கத்தாவில் 'சாதர் திவானி அதாலத்' என்ற சிவில் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. கல்கத்தாவில் ‘சாதர் நிஜாமத் அதாலத்' என்ற கிரிமினல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கி.பி. 1781இல் கல்கத்தாவில் மதரஸா கல்வி நிறுவனத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் துவக்கினார்.வருவாய் துறையை மேம்படுத்த கொல்கத்தாவில் வருவாய் துறைக் கழகம் நிறுவப்பட்டது. மும்பை மற்றும் சென்னை ஆளுநர்கள் வங்காள தலைமை ஆளுநருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள். கி.பி. 1784ஆம் ஆண்டு ஆங்கில பிரதமர் இனைய பிட் என்பவர் பிட் இந்தியச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்திய வாணிகத்தை ஊக்குவிக்க வியாபாரிகளுக்கு சுங்க வரியில் 2.5% தள்ளுபடி அளித்தார். கல்கத்தா, டாக்கா, ஹூக்ளி, பாட்னா, முர்ஷிதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் சுங்கச் சாவடிகளை ஏற்படுத்தினார். ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு கி.பி. 1774. வாரன்ஹேஸ்டிங்ஸ் ரோகில்கண்ட் ஆயோத்தியுடன் இணைத்தார். கி.பி. 1773இல் மராத்தியர்கள் ரோஹில்கண்ட் மீது படையெடுத்தார். வாரன்ஹேஸ்டிங்ஸ் பனாரசை ஆண்ட மன்னர் செயித்சிங்கிடம் அதிக வரிப்பணம் கோரினார். பொய்க் கையெழுத்து போட்ட விவகாரத்தில் நந்தகுமார் கொலை செய்யப்பட்டார். ஒழுங்குமுறை சட்டத்தின் குறைகளைப் போக்க பிட் இந்திய சட்டம் கொண்டு வரப்பட்டது. தரமான பொருட்களை வாங்க ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி வணிகக்குழுவை உருவாக்கியது.
காரன்வாலிஸ் பிரபு (கி.பி. 1786-1793) :
காரன்வாலிஸ் பிரபு கி.பி. 1786ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். காரன்வாலிஸ் நிலையான நிலவரித் திட்டத்தை கி.பி. 1793ஆம் ஆண்டு வங்காளத்திலும் பீகாரிலும் அறிமுகப் படுத்தினார். நிலையான நிலவரித் திட்டத்தின் மூலம் ஜமீன்தார்கள் 10 ஆண்டுகளுக்கு நிலத்தின் சொந்தக்காரர்கள் ஆனார்கள். இந்திய பொது குடிமையியல் பணியின் தந்தை என காரன்வாலிஸ் அழைக்கப்படுகிறார். நிலையான காவலர் துறையை உருவாக்கியவர் காரன்வாலிஸ் ஆவார். காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பைத் தொகுத்தவர் சர் ஜார்ஜ் பார்லோ ஆவார். நிலையான நிலவரித் திட்டத்தினால் அதிகம் பாதிப்பிற்குள்ளானவர்கள் விவசாயிகள். பேரரசுக் கொள்கையை வெல்லெஸ்லி பின்பற்றினார். கி.பி. 1791ஆம் ஆண்டு கல்கத்தாவில் காவல்துறை ஆணையர் நியமனம் உருவாக்கப்பட்டது. கி.பி. 1793ஆம் ஆண்டு காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பினை சர் ஜார்ஜ் பார்லோ என்பவர் தொகுத்து வெளியிட்டார்.
வெல்லெஸ்லி பிரபு :
காரன்வாலிஸ் பிரபுவைத் தொடர்ந்து சர் ஜான் ஷோர் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றார். சர் ஜான் ஷோர்-ரைத் தொடர்ந்து வெல்லெஸ்லி பிரபு கவர்னர் ஜெனரலாக 1796 பதவியேற்றார். வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் இந்திய மன்னர் ஹைதராபாத் நிஜாம் ஆவார். வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் இந்திய மன்னர் ஹைதராபாத் நிஜாம் ஆவார். அயோத்தியை ஆண்ட நவாப்பை வெல்லெஸ்லி கட்டாயப்படுத்தி துணைப்படைத் திட்டத்தை ஏற்கச் செய்தார். பேஷ்வா இரண்டாவது பாஜிராவ் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். வெல்லெஸ்லி பிரபு ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர் என புகழப்படுகிறார்.
மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் (கி.பி. 1813 - 1823) :
வெல்லெஸ்லி பிரபுவைத் தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றழைக்கப்பட்ட மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் தலைமை ஆளுநராகப் பொறுப் பேற்றார். மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக் காலத்தில் 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறை வேற்றப்பட்டது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வியாபார உரிமம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது. கி.பி. 1813ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் முக்கிய சரத்தாகும். நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கர் இனத்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பெரும் விளங்கினார்கள். சவாலாக ஆங்கிலேயர்கள் இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு கூர்க்கர் இனத் தலைவர் அமர்சிங்கைத் தோற்கடித்தார். கி.பி. 1816ஆம் ஆண்டு கூர்க்கர்கள் ஆங்கிலேயர்களோடு கிளெலி அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. பிண்டாரிகள் மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்ளைக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். அமிர்கான், வாசில் முகமது, கரிம்கான் மற்றும் சேட்டு போன்றவர்கள் பிண்டாரிகளின் தலைவர்கள். ஹேஸ்டிங்ஸ் ஒரு பெரும் ஆங்கிலப் படையை பிண்டாரிகளுக்கு எதிராக அனுப்பி அவர்களைத் தோற்கடித்தார். ஹேஸ்டிங்ஸ் கி.பி. 1822ஆம் ஆண்டு வங்காள குத்தகைச் சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் நலனைப் பாதுகாத்தார். இந்திய மக்களின் ஆங்கில கல்வி வளர்ச்சிக்காக கி.பி. 1817ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு கல்லூரியை நிறுவினார். வட்டார மொழி பத்திரிக்கை தடை சட்டத்தை நீக்கினார். சமச்சார் பத்திரிக்கை என்ற செய்தித்தாள் வெளிவர காரணமாக இருந்தார். ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தில் இராயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெல்லெஸ்லி பிரபு துவக்கிய பணியை ஹேஸ்டிங்ஸ் முடித்து வைத்தார். ஆங்கில நாட்டு வியாபாரிகளுக்கும் மத போதகர்களுக்கும் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோடு கிறிஸ்தவ சமயத்தை இந்தியாவில் பரப்ப அனுமதித்த பட்டய சட்டம் 1813. மராத்திய நிலப் பகுதியில் சதாரா என்ற சிற்றரசை உருவாக்கி சத்ரபதி சிவாஜியின் வாரிசாக பிரதாப் சிங்கை அரசராக ஆங்கில அரசு பிரகடப்படுத்தியது.
வில்லியம்பெண்டிங் பிரபு (கி.பி. 1828 / 1835):
ஹேஸ்டிங்ஸ் பிரபு-க்குப் பிறகு ஆர்ம்ஹர்ஸ்ட் பிரபு தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் பர்மியர்கள் அசாமை கைப்பற்ற முயற்சித்தனர். ஆர்ம்ஹஸ்ட் பிரபு கி.பி. 1824ஆம் ஆண்டு பர்மியர் மீது போர் தொடுத்தார். இது முதலாம் பர்மியர் போர் என்று அழைக்கப்படுகிறது. இப்போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். இப்போரின் முடிவில் கி.பி. 1816ஆம் ஆண்டு யாண்டபூ உடன்படிக்கையின் படி முடிவடைந்தது. ஆர்ம்ஹர்ஸ்ட் பிரபுவைத் தொடர்ந்து வில்லியம் பெண்டிங் பிரபு கி.பி. 1828ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பெண்டிங்பிரபு இந்திய சுதேச அரசர்களிடம் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினார். பெண்டிங் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களைப் புகுத்தினார். எனவே இந்திய கவர்னர் ஜெனரல்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அபனி வியாபாரத்தை முறைப்படுத்தி கம்பெனியின் வருவாயைப் பெருக்கினார். இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பட்டா அல்லது ஊதியத்தைக் குறைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்ட்ரேட் பதவிகளை ஒன்றிணைத்தார். இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டு வந்த பாரசீக மொழிக்குப் பதிலாக வட்டார மொழிகளைப் புகுத்தினார். புதியதாக சட்ட நிபுணர் மெக்காலே பிரபுவை நியமனம் செய்தார். மாநில மேல்முறையீட்டு நீதிமன்றங்களைக் கலைத்தார். சிவில் வழக்குகளுக்காக சாதர் திவானி அதாலத் மற்றும் கிரிமினல் (குற்றவியல்) வழக்குகளுக்காக சாதர் நிஜாமத் அதாலத் என்ற மேல் முறையீட்டு நீதிமன்றங்களை அலகாபாத்தில் நிறுவினார். வில்லியம் பெண்டிங் பிரபு கி.பி. 1829ஆம் ஆண்டு சதி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தார். நரபலி முறையை ஒரிசாவில் வாழ்ந்த மலைவாழ் இனத்தவரிடம் காணப்பட்டதை ஒழித்தார். வில்லியம் பெண்டிங் காலத்தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரியும் பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியும் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆங்கில மொழி போதனை மொழியாக மாறியது. வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சி காலத்தில் 1833ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது. வங்காள கவர்னர் ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார். கவர்னர் ஜெனரல் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றார். கத்தியவார் மற்றும் இராஜஸ்தானில் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட மற்றொரு கொடிய பழக்கமான பெண் சிசுக் கொலையை ஒழித்தார்.
டல்ஹௌசி பிரபு (கி.பி. 1848 - 1855):
டல்ஹௌசி பிரபு கி.பி. 1848ஆம் ஆண்டு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். வாரிசு இழப்புக் கொள்கை மூலம் சுதேசி நாடுகளை இணைத்தார். இக்கொள்கையின் அடிப்படையில் டல்ஹௌசி பிரபு சகாரா, ஜெய்பூர், சாம்பல்பூர், உதய்பூர், ஜான்சி மற்றும் நாகபுரி ஆகிய பகுதிகளை இணைத்தார். டல்ஹௌசி பிரபு 1856ஆம் ஆண்டு நல்லாட்சி நடைபெறவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அயோத்தி நவாப் வாசித் அலிஷாவை பதவியிறக்கம் செய்து அயோத்தியை இணைத்தார். தஞ்சாவூரையும் ஆங்கில பேரரசுடன் இணைத்துக் கொண்டார். ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு துணை ஆணையரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப் பட்டது. சிம்லா கோடைக்கால தலைநகரமாகவும் கல்கத்தா குளிர்கால தலைநகரமாகவும் செயல்பட்டது. டல்ஹௌசி இருப்புப் பாதையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதன்முதலில் இருப்புப்பாதையை அறிமுகப்படுத்திய பெருமை டல்ஹௌசியைச் சாரும். முதல் இருப்புப்பாதை 1853ஆம் ஆண்டு பம்பாய் - தானாவிற்கு இடையேயும் 1854ஆம் ஆண்டு ஹௌரா - ராணிகஞ்ச் இடையேயும் 1856ஆம் ஆண்டு சென்னை அரக்கோணம் இடையேயும் இரயில் பாதை அமைக்கப்பட்டன. டல்ஹௌசி பிரபு பொதுப்பணித்துறையை தனித்துறையாக ஏற்படுத்தினார். பெஷாவர் மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் பெருவழிச் சாலை புதுப்பிக்கப்பட்டது. கங்கை கால்வாய் இவர் காலத்தில் வெட்டப்பட்டது. டல்ஹௌசி பிரபு காலத்தில் 1854ஆம் ஆண்டு சர் சார்லஸ் உட்ஸ் தலைமையில் கல்விக் குழு அமைக்கப் பட்டது. இலண்டன் பல்கலைக் கழகத்தை மாதிரியாகக் கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலை கழகங்கள் நிறுவப்பட்டன. ரூர்கி என்ற இடத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இராணுவத்தின் தலைமையிடத்தை கல்கத்தாவிலிருந்து சிம்லாவுக்கு மாற்றினார். பீரங்கி படையின் தலைமையிடத்தை கல்கத்தாவிலிருந்து மீரட்டிற்கு மாற்றினார். கி.பி. 1856ஆம் ஆண்டு விதவை மறுமணச் சட்டம் கொண்டுவர மூலக் காரணமாக விளங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக